1.2 வரைவு மலிதல் | ||
திருமணம் தொடர்புடையதாகத் தொடங்கி, தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளும் பேச்சுகளும் வரைவு மலிதல் எனப்படும். களவு வாழ்வை மாற்றிக் கற்பு வாழ்வை நிலைப்படுத்தத் தொடர்ந்து நடக்கும் மகிழ்ச்சியான முயற்சி மிகுதலை வரைவு மலிதல் என்றார் ஆசிரியர். | ||
வரைவு மலிதல் எனப்படும் திருமணம் தொடர்பான முயற்சிகளும் நிகழ்ச்சிகளும் நான்கு வகையாகப் பாகுபடுத்தி உரைக்கப்பட்டுள்ளன. அவையாவன: | ||
(அ) வரைவு முயல்வு உணர்த்தல் |
: | திருமணம் தொடர்பான முயற்சிகளைத் தலைவன் தொடங்கிவிட்டான் என்பதனைத் தோழி தலைவிக்குத் தெரிவித்தல். |
(ஆ) வரைவு எதிர்வு உணர்த்தல் | : | தலைவன் தொடங்கிய
திருமண முயற்சியை அவனது உறவினர், தலைவியின் பெற்றோரிடம் முன் மொழிய, அதைப்
பெற்றோர் ஏற்றுக் கொண்டனர் என்பதைத் தோழி, தலைவியிடம் கூறுதல். |
(இ) வரைவு அறிந்து மகிழ்தல் | : | பெற்றோர், தன்
மனம் விரும்பும் தலைவனையே மணமகனாக ஏற்க இசைந்தனர் என்ற செய்தியை அறிந்த தலைவி,
மனம் மகிழ்தல்; தனக்குள் பேசி மகிழ்தல். |
(ஈ) பராவல் கண்டு உவத்தல் (பராவல் = பராவுதல், வழிபடுதல்) |
: | தான் விரும்பும்
மணவாழ்வு உறுதிப்படுவதை உணர்ந்த தலைவி அதற்கு நன்றிபாராட்டும் நோக்குடன்
தெய்வத்தை வணங்கி நிற்பாள். அதைக் கண்டு தலைவன் மகிழ்தல்.
|
மேலே நான்காக வகைப்படுத்தி உரைக்கப்பட்ட வரைவு மலிதல் என்னும் செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தி எழுவகைக் கிளவிகளாக (கூற்றுகளாக) வரிசைப்படுத்தி வழங்கியுள்ளார் நூலாசிரியர். அவையாவன : | ||
| ||
காதலன், காதலியை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்து, அதற்கு ஈடாக (விலையாக)த் தான் தர விரும்பும் பொருள் இது எனச் சொல்லி அனுப்புதல். இச் செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறுதல். | ||
விலை என நல்கினன் நாடே - (ஐங்குறுநூறு - 147) | ||
என்னும் சங்க இலக்கியத் தொடர் தலைமகளை மணக்கும் நிலைக்கு விலையாகத் தன் நாட்டையே வழங்கத் தலைவன் இசைந்ததை வெளிப்படுத்தும். | ||
| ||
தான் விரும்பும் தலைவனொடு திருமணம் நிகழுமானால் தாயும் மிக மகிழ்வாள் எனத் தலைவி, தாய் அடையப் போகும் மகிழ்வை எண்ணிப் பார்த்து இன்புறுதல். (உள்ளல் - நினைத்தல்) | ||
| ||
தலைவனின் உறவினர் மணம் பேச வந்தபோது, அவர்களைத் தங்கள் பெற்றோர் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு வரவேற்ற இன்பச் செய்தியைத் தோழி, தலைவிக்குச் சொல்லுதல். | ||
| ||
தன் பெற்றோர் தலைமகனது விருப்பத்திற்கு உடன்பட்டதைத் தோழி மூலமாக அறிந்த தலைவி, மிகுந்த மகிழ்ச்சியால் தன் மனத்துடன் தானே பேசுதல். | ||
| ||
உரிய நேரத்தில் - உரிய முறையில் வரைவு விருப்பத்தைத் தலைவியின் பெற்றோரிடம் முன்வைத்து இசைவு பெற்ற தலைவனைத் தோழி வாழ்த்துதல். | ||
| ||
தான் விரும்பும் தலைவனோடு திருமணம் நிகழப்போவதை அறிந்த தலைவி, தெய்வத்தை வணங்கி நிற்பதைத் தோழி தலைவனுக்குக் காட்டுதல். | ||
| ||
தான் விரும்பும் தலைவனோடு திருமணம் நிகழப் போவதை அறிந்த தலைவி, தெய்வத்தை வணங்கி நிற்பதைத் தோழி, தலைவனுக்குச் சுட்டிக் காட்ட, அதைக் கண்ட தலைவன் அகம் மிக மகிழ்தல். | ||
மேற்கண்ட எழுவகைப் பிரிவுகளும் வரைவு மலிதலின் விரிவுகளாக அமைகின்றன. |
1. |
வரைவு என்றால் என்ன? | விடை |
2. |
இருவகை வரைவுகள் யாவை? | விடை |
3. |
வரைவிற்குரிய இருவகைக் கிளவித் தொகைகள் யாவை? | விடை |
4. |
வரைவு மலிதல் - விளக்குக. | விடை |
5. |
வரைவு மலிதலின் வகைகள் எத்தனை? அவை யாவை? | விடை |