3.0 பாட முன்னுரை

நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப்பொருள் என்னும் இலக்கண நூலின் நான்காம் இயல் கற்பியல் ஆகும். களவு என்பது மறைமுகத் காதல் வாழ்க்கை. அது, வரைவு என்னும் திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு கற்பாக மாறுகிறது. எனவே களவியல் - வரைவியல் இரண்டுக்கும் பிறகு கற்பியல் என்னும் பிரிவை நாற்கவிராச நம்பி அமைத்துள்ளார்.

பத்து நூற்பாக்களைக் கொண்ட கற்பியல் என்னும் நான்காம் இயலில் இடம் பெறும் இலக்கணச் செய்திகளை விளக்குவதாக இப்பாடம் அமைகிறது.

கற்பின் இலக்கணம்

கற்பிற்குரிய கிளவிகள்

இல்வாழ்க்கையின் வகையும், விரிவும்.

பரத்தையிற் பிரிவின் வகையும் அதற்குரிய கிளவிகளும்.

ஓதற் பிரிவு முதலான எஞ்சிய ஐவகைப் பிரிவுகளுக்கும் உரிய கிளவிகள்.

முதலான செய்திகள் இப்பாடத்தில் இடம் பெறுகின்றன.