3.6 தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் கீழ்க்காணும் இலக்கணச் செய்திகளை அறிந்து கொண்டோம்.

(1) தலைவனும் தலைவியும் பல அறநெறிகளைக் கற்றுக்கொண்டு வாழ்வது கற்பு.

(2) கற்பு எனப்படும் இல்வாழ்க்கை தலைவன், தலைவி, தோழி செவிலி என்னும் நால்வரது மகிழ்ச்சியின் ஒருங்கிணைப்பாக அமைகிறது.

(3) கற்பு வாழ்க்கையில் சூழ்நிலை காரணமாகப் பல்வேறு பிரிவுகளைத் தலைவன் மேற்கொள்வான்.

(4) தலைவன் மேற்கொள்ளும் பிரிவுகளில் பெரிதுபடுத்திப் பேசப்படுவது பரத்தையிற் பிரிவு என்பதாகும்.

(5) பரத்தையிற் பிரிந்த தலைவன் வாயில்கள் எனப்படும் பாணன், விறலி, தோழி முதலானவர்கள் மூலம் மீண்டும் தலைவியைச் சேரும் முயற்சியை மேற்கொள்வான்.

(6) கற்பு வாழ்க்கை மேற்கொள்ளும் தலைவன், ஓதல், காவல், தூது, துணை, பொருள் என்னும் ஐவகைப்பட்ட காரணங்களுக்காகவும், பிரிந்து செல்லுதல் உண்டு.

 

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

பிரிவின் எஞ்சிய வகைகளை எழுதுக.

விடை

2.

பரத்தையிற் பிரிவு ஒழிந்த எஞ்சிய பிரிவுகளுக்கான கிளவித் தொகைகள் எத்தனை? யாவை?

விடை

3.

வன்புறை - வன்பொறை விளக்கம் தருக.

விடை

4.

செவ்வணி, வெள்ளணி - விளக்குக.

விடை