5.4 அகப்புறக் கைக்கிளை |
கைக்கிளை என்பது தலைவன் தலைவி என்னும் இவ்விருவரில் ஒருவரிடம் மட்டும் தோன்றும் அன்பைக் குறித்ததாகும். அவற்றுள் ஒன்றான அகப்பொருள் கைக்கிளை என்பது ஒரு பக்கத்து அன்பாயினும், அதனை உணரத்தக்க காமத் தன்மை வாய்ந்த பெண்ணிடம் தலைவன் பேசுவதாக அமைந்தது. |
தலைவி தன் உடன்பாட்டை அல்லது மறுப்பைக் குறிப்பாக உணர்த்தாதபோதும் தலைவன் மட்டும் வெளிப்படுத்திய அன்பு என்பதனால் அதனை அகப்பொருட் கைக்கிளை என்றனர். |
மாறாக, அகப்புறக் கைக்கிளை என்பது ஒரு தலைவன் காமத்தன்மை உணரும் பக்குவம் அடையாத இளம் பெண்ணிடம் சென்று தன் விருப்பத்தைக் குறிப்பிட்டு அவள் குறிப்பை அறியாமல் மேன்மேலும் பேசிச்கொண்டிருப்பதாகும். |
தலைவன் - தலைவி என்னும் இருவரில் ஒருவர் மட்டும் கொள்ளும் காதல் அல்லது காமம் கைக்கிளை ஆகிறது. எதிரில் இருக்கும் இன்னொருவர் அக் காமம் அல்லது காதலை உணரும் தன்மை உடையவராக இல்லாதபோது, அதுவே அகப்புறக் கைக்கிளையாகும். |
தலைமைக்குரிய தகுதிப்பாடு இல்லாதவர்கள், இழிந்த குலத்தவர்கள் முதலானவர்கள் அகப்புறக் கைக்கிளைக்கு உரியவர்கள். |