தன் மதிப்பீடு : விடைகள் - II

4.

நிமித்தம், நேர்தல், சேட்படை, வன்பொறை - இவற்றின் வரையறைகளை வழங்குக.

நிமித்தம் - அகப்பொருள், உரிப்பொருள் (ஒழுக்கம்) தொடர்பான முன்பின் செயல்பாடுகள்.

நேர்தல் - பாங்கன், தலைவனது கருத்துக்கு உடன்பட்டுச் செயல்பட முடிவு செய்தல்.

சேட்படை - தலைவனது வேண்டுகோளைத் தலைவி உடனடியாக ஏற்காமல் மறுப்பது.

வன்பொறை - தலைவி, தன் மெல்லிய இயல்பிற்கு மாறாகத் தோழியின் அறிவுரைகளுக்குப் பிறகு, தலைவனது பிரிவைப் பொறுத்துக் கொண்டிருத்தல்.

முன்