தமிழ்
இலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து பிரிவுகள்
உள்ளதை நீங்கள் அறிவீர்கள். பொருள் இலக்கணம் அகம், புறம் என இரு வகைப்படும்.
அகப்பொருள் இலக்கணம் பற்றி முன்பு படித்தோம். புறப்பொருளின் அமைப்பையும்
இலக்கணத்தையும் விளக்குவது புறப்பொருள் வெண்பா மாலை ஆகும். அதன் அடிப்படையிலேயே
அடுத்து வரும் ஆறு பாடங்களும் அமைந்திருக்கின்றன.
|