2.2 வெட்சித் திணையும் துறைகளும் பெரும்பான்மையும் மண் கவர நினைக்கும் வேந்தனே முதலில் போர்ச் செயலைத் தொடங்குவான். அவன் முதலில் செய்வது ஆநிரை கவர்தலே ஆகும். வெட்சி நிரை கவர்தல் என்பது பழம்பாடல் ஒன்றன் பகுதி, அறம் பேணும் அரசர்க்கு ஆநிரை (ஆநிரை = ஆ+நிரை) கவர்தலே உற்ற தொழிலாகும் என்பதைப் பின்னர்ப் பார்க்கலாம். துறை என்பது ஒரு நிகழ்வுக்கான வளர்ச்சிப்படி நிலைகளுள் ஒன்று என்பதை முன்னைய பாடத்தில் படித்தோம் அல்லவா? வெட்சித் திணைக்குப் பத்தொன்பது துறைகள் கூறப்படுகின்றன. வெட்சித் திணையையும் அதற்குரிய துறைகளையும் புறப்பொருள் வெண்பாமாலையின் முதல் நூற்பா கூறும், அது வருமாறு,
வெட்சி ஒழுக்கத்தில் ஐந்து நிலைகளைக் காணமுடியும். அவை, கவர்தல், பேணல், அடைதல், பகுத்தல், வணங்கல் என்பனவாம். வெட்சித் திணையின் 19 துறைகளையும் இந்த 5 நிலைகளில் அடக்கலாம்.
அவற்றின் பொருளையும், சில துறைகளின் விளக்கங்களையும் காணலாம். |