திணைப் பூவைச் சூடுவது, தம்மைப் பிற மறவரிடமிருந்து
வேறுபடுத்திக் காட்டவே என்பதை விளக்குகிறது.
கரந்தை என்பது கரந்தைப் பூவைக் குறிப்பதோடு,
நிரை
மீட்சி எனும் ஒழுக்கத்தையும் அறிவிக்கும்
குறியீட்டுச் சொல்
என்பதை விளக்கிக் காட்டுகிறது. வெட்சி
நிரை
கவர்வது; கரந்தை
நிரை மீட்பதாகும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
கரந்தைத்
திணையையும் அதன் துறைகள் பதின்மூன்றனையும் விளக்குகிறது.
துறைப் பெயர்க்காரணம் - துறைப் பொருத்தம்
ஆகியவற்றைப் பேசுகின்றது. கவர்ந்த ஆநிரையை மீட்பது, பகை
மன்னனுடன் போரிடுவதற்கான காலமும் களனும் குறித்துக்
கொள்வதற்கே என்பதையும், மீட்கும் முயற்சியில் கரந்தை மறவர்
எய்தும் இழப்புகளும் உண்டு என்பவற்றையும் இயம்புகின்றது.
|