பாடம் - 6
D02136 நொச்சியும் உழிஞையும்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

நொச்சித் திணை எயில் (மதில்) காத்தலையும், உழிஞைத் திணை அதனை முற்றுகை இடுதலையும் குறிப்பிடுகின்றன. இவற்றைப் பற்றி இந்தப் பாடம் பேசுகிறது.

உழிஞை மருதத்தின் புறன் ஆகும். எனவே உழிஞையின் மறுதலையாகிய (எதிரதாகிய) நொச்சியும் மருதத்தின் புறனே என்பதை விளக்குகின்றது

முறையே நொச்சி-உழிஞை ஆகியவற்றின் இலக்கணங்களைப் புறப்பொருள் வெண்பா மாலையின் அடிப்படையில் மொழிகின்றது. மேலும் நொச்சித் திணையின் எட்டுத் துறைகளையும் உழிஞைத் திணையின் இருபத்தொன்பது துறைகளையும் பற்றிப் பேசுகின்றது.

உழிஞை மறவர் மதில் புறத்திலிருந்தும், நொச்சி மறவர் அவர்களை எதிர்த்தும் போரிடுவதைச் சொல்கின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • எயில் வளைத்தலாகிய உழிஞையும், எயில் காத்தலாகிய நொச்சியும் மதிற் போர் பற்றியன. இப்போர், பண்டை நாளில் நிகழ்த்தப் பெற்ற முறைமையை அறியலாம்.
  • குடையையும் வாளையும் நல்ல முழுத்தத்தில் வடதிசைக் கண் செல்ல விடுதல் ; வென்ற பின் பகைநாட்டு மதிலைத் தரைமட்டமாக்கி உழுது வித்திடும் வழக்கம் ; திறை கொண்ட பின் பாடி வீட்டை விட்டுப் பெயர்தல் ; நொச்சியாருக்குத் துணைப்படையாக வந்த வேற்றுப்படை பணியும் வரை பாடியைவிட்டுப் பெயராதிருத்தல் போன்ற மரபுகளை அறியலாம்.
  • வென்ற மன்னன் மாற்றான் மகளை மணமுடிக்கப் பெண் கேட்பதும், பகைமன்னன் தன் மகளைத் தர மறுப்பதும் போன்ற பிறவற்றையும் அறிந்து மகிழலாம்.

பாட அமைப்பு