1.2 தும்பை - விளக்கம் தும்பைப் போர் பற்றிய விளக்கம் முதல் கொளுவில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கான விளக்கம் வெண்பாவில் தரப்பட்டுள்ளது. தும்பை என்பது பூவின் பெயர் என்பதும், தும்பைப் பூவைச் சூடிப் போர் புரிவதால் தும்பைப் போர் என்று போர் அழைக்கப்படுவதையும் அறிவீர்கள். இதனைக் கொளு காட்டுகிறது. செங்களத்து மறம்கருதி (தலைமலைதல் = தலையில் சூடுதல்) ‘வெண்மையான தும்பைப் பூவைச் சூடிக் கொண்டு, குருதி பெருக்கெடுத்து ஓடக்கூடிய போர்க்களம் செல்லக் கருதுதல்’ என்பது இதன் பொருள். தும்பை என்பதன் பொருள் இதுவே. தும்பை பற்றிய கொளுவின் கருத்தை, அதற்குரிய வெண்பா நன்கு விளக்குகிறது. இலக்கிய நயத்தோடு செய்தியை விளக்க வெண்பா உதவுகிறது. கார்கருதி நின்றதிரும் கௌவை விழுப்பணையான் ‘புகழையும் சினம் மிக்க படையினையும் மேகம் போன்று முழங்குகின்ற முரசினையும் உடையவன் எம் வேந்தன். அவன், குருதி ஒழுகி நிலத்தை நனைக்கும் வண்ணம் செய்கின்ற கடும் போரையே நோக்கமாகக் கொண்டுள்ளான். அதற்காகத் தும்பை மாலையைச் சூடிப் போரினை மேற்கொண்டான்.’ வெண்பா, ஒரு வீரனின் கூற்றாக அமைந்துள்ளது. தும்பைப் போரின் கடுமையைக் ‘குருதி ஒழுகி நிலத்தை நனைக்கும்’ என்ற குறிப்பு உணர்த்துகிறது. |