|
இந்தப் பாடத்தைப்
படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
|
| |
|
|
|
-
அசை, சீர் என்பவற்றின் பெயர்க் காரணங்களை
அறியலாம்.
-
அசை அமையும் வகை; அசையின் வகை; சீரின்
வகை,
சீர்கள் பெறும் பலவகைப் பெயர்கள், பெயர்கள் அவ்வாறு
வழங்கப்படுவதற்கான காரணங்கள் போன்றவற்றைப் பற்றி
அறியலாம்.
-
அலகும் அலகிடும் முறையையும் அறிவதால்,
பாக்கள் இன்ன
வகையின எனப் பிரித்தறியும் பயனை எய்தலாம்.
-
மெய்யெழுத்தின் மாத்திரையளவைக் கண்டு, அதனை
அலகிடுங்கால் கணக்கில் கொள்ளாவிட்டாலும், அது,
அசையெல்லையாகக் கொள்ளப் பெறுவதை அறியலாம்.
அறிந்து, ‘ஒன்றில் சிறியர் ஒன்றில்
பெரியர்’ என வோர்ந்து
வாழ்வை இன்னிதின் நடத்தலாம்; தன்னம்பிக்கை
கொள்ளலாம்.
-
‘வாய்பாடு’களைக் கொண்டு அமைத்துத்
தந்த முன்னோர்களின் உதவி செய்யும் தன்மையை உணரலாம்.
|
|
|