|
வினாவிலும் விடையிலுமாக நடக்கின்ற மொழி
(Language) தனிச் சொற்களில் வாழவில்லை.
தொடர்ச்சொற்களிலேயே வாழ்கின்றது என்கின்றது. சொற்கள்
தம்முள் யாதேனும் ஓர் இயல்பு பற்றித் தொடர்வதனைப்
புணர்ச்சி என்பதுபோல நின்றசீரின் ஈற்றசையோடு வந்தசீரின்
முதலசை பந்தப்படுவது தளை என்கின்றது. தளையைக்
கொண்டுதான் ஓசை அறியப்படுகின்றது; நால்வகை ஓசையையும்
உண்டாக்குவது தளையே என்கின்றது. தளைகளைக்
காணும்போது வந்த சீர் நின்ற சீராகவும், நின்ற சீர் வந்த
சீராகவும் மாறும் என்கின்றது.
|