பாடம் - 5

D03115 அடியும் தொடையும்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

‘அடி’ என்பது செய்யுள் உறுப்புகள் வரிசையில் ஐந்தாம் உறுப்பு; தொடை, ஆறாம் உறுப்பு என்று சொல்கின்றது, அடி, தொடை எனும் இரண்டும் முதனிலைத் தொழிற்பெயர்கள்; இரண்டும் செய்யுளின் புறவய உறுப்புகள் என்கின்றது. ‘அளவு’ ஒன்றனை மனத்தில் இறுத்திக் கொண்டுதான் பெரியது, சிறியது என நாம் சொல்கிறோம் என்கிறது. செய்யுள் ஒன்று, சீரடியாலும் அடியாலும் நடக்கும் ஆதலின், அவற்றால் உருவாகும் தொடைகளும் பலவாகும் என்று சுட்டுகின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • பதிப்புத் துறையில் ‘அடி’ பற்றிய அறிவு, பயனை எய்துவிக்கும்.

  • அடியையும் அடியின் அமைப்பையும் கொண்டு இன்ன வகைப்பா என்று அறியும் பயன் கிட்டும்.

  • பாவினைப் புனைவோர்க்கு அடியின் சிற்றெல்லை பற்றிய அறிவு பெரிதும் உதவும்.

  • தொடைகள் அமையப் பாடின், அகவயப்பட்ட நயத்துடன் புறவயப்பட்ட நயமும் சேர்ந்துகொண்ட பயனைப் பெறலாம்.

  • சீரடிகளின் வகைகள், அவற்றிற்கான பெயர்கள், அப்பெயர்கள் காரணம் பற்றி இடப்பெற்றவை என்பவற்றை அறியலாம்.

  • எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் மொழிக்கூறுகள் சிலவே தொடைகளை உருவாக்குகின்றன என்பதையும் தெளியலாம்.

பாட அமைப்பு