தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
5) | இயைபுத் தொடை விகற்பங்களைக் கண்டறிய, ஓரடியின் சீர்களை இடமிருந்து வலமாகப் பார்க்கலாமா? பார்க்கலாம் எனினும் பார்க்கலாகாது எனினும் அதற்கான காரணம் என்ன? |
பார்க்கலாகாது. ‘இயைபு’ என்பது ஈற்றெழுத்து ஒன்றிவருவது ஆதலால், சீர்க்கண் உருவாம் இயைபுத் தொடை விகற்பங்களைக் கண்டறிய வலமிருந்து இடமாகப் பார்வையைச் செலுத்த வேண்டும். |