பாடம் - 6

D03116 தொடை வேறுபாடுகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

செய்யுளில் இடம் பெறும் தொடை என்னும் அழகு பற்றியும் அதன் வகைகள் பற்றியும் புலப்படுத்துகிறது.

உயிர், மெய், உயிர்மெய், வினையெனத் தெரிந்து பெயர் சூட்டிய நம் முன்னோர், இணை முதலான ஏழு தொடைகளின் பெயர்களையும் காரணம் பற்றியே இட்டுள்ளனர் என்பதனை அறிவிக்கின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • மோனைத் தொடை என்பதற்கும் இணை மோனைத் தொடை என்பதற்கும் உரிய உண்மைப்பொருளை அறிதலாகிய பயன் எய்தலாம். முன்னது செய்யுளடிகளில் வருவது; பின்னது ஓர் அடிக்குள் வருவது என அறிதல் பயனாம்.

  • அந்தாதி, இரட்டை, செந்தொடைகளுக்கு விகற்பம் இல்லாமைக்குக் காரணம் அறியலாம்.

  • பொழிப்பு, கூழை, கதுவாய் (கதுவியுள்ள இடம்) என்பவற்றின் பொருளை அறிந்தும் பெயரிடும் முறைகளைக் கண்டும், போலச் செய்தல் வகையால் பெயரிடக் கற்றுக் கொள்ளலாம்.

  • தொடையும் தொடை விகற்பமும் நாற்பத்து மூன்றாமாற்றை அறியலாம்.

  • இயல்புக்கு வகைமை இல்லை, திரிபுக்கு வகைமை உண்டு என்னும் பொது நியதியை அறியலாம்.

  • இயற்கையை உற்று நோக்கலில் நம்மனோர்க்கு இணை நம்மனோரே என்று புரிந்துகொள்ளலாம்.

பாட அமைப்பு