|
|
பா வகைகளான வெண்பா,
ஆசிரியப்பா, கலிப்பா,
வஞ்சிப்பா, மருட்பா என்பவற்றுடன் தமிழ்
யாப்பு முடிவுற்று
விடவில்லை என்பதை நீங்கள் புரிந்து
கொள்ளலாம்.
சிலப்பதிகாரம் தொடங்கிப் பாரதிதாசன் வரையிலும் அதற்குப்
பின்பும் ஆசிரியவிருத்தம் என்னும் பா இனம் செல்வாக்குப்
பெற்று வளர்ந்திருப்பதைப் புரிந்து
கொள்வீர்கள்.
கம்பராமாயணம், சீவகசிந்தாமணி போன்ற
நூல்கள் எழுந்த
காலகட்டங்களில் நால்வகைப் பாக்களைவிட
மிகுதியாகப்
புலவர்களின் கருவியாக இருந்தவை விருத்தங்களே
என
உணர்ந்து கொள்ளலாம்.
|