|
6.0
பாட முன்னுரை
மாணவர்களே!
ஒழிபியலின் இறுதியும் யாப்பருங்கலக் காரிகையின்
இறுதியுமாகிய பாடத்தினுள் நுழைகின்றோம். ஒழிபியல் முதல் பாடத்தில் எழுத்து,
அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றுக்குரிய புறனடைக் கருத்துகளை அறிந்து
கொண்டோம். அவற்றுள், உறுப்பியலிலும் செய்யுளியலிலும் சொல்லப்படாத புதிய
இலக்கணக் கருத்துகள் சிலவும் இருக்கக் கண்டோம். இப்பாடத்தில் எதுகை, மோனை
எனும் முக்கியமான தொடைகளுக்குரிய விரிவான புறனடைக் கருத்துகளையும்,இதுவரை
இவ்வியலிலும் சொல்லப்படாத புதிய கருத்துகள் சிலவற்றையும் காண்போம்.இறுதியில்
முழுநூலிலும் சொல்லப்பட்ட கருத்துகளின் தொகுப்புச் சுருக்கத்தையும்
காண்போம். |