6.7 கௌடம், வைதருப்பம் வேறுபாடு

1)
செறிவு

கௌடநாட்டினர்நெறி இடையின ஒற்று     மிக்கு வருவது. வைதருப்பம் வல்லொற்று மிக்கு வருவது.

2)
தெளிவு
கௌடம் சொல்லாற்றல் மிக்கது. வைதருப்பம் பொருள் தெளிவுடையது.
3)
சமநிலை
கௌடம் வல்லொற்று மேலோங்கியிருக்கும். வைதருப்பம் மூவின மெய்யும் கலந்து வரும்.
4)
சொல்லின்பம்
கௌடம் மோனைத் தொகை மிக்கு வரும். வைதருப்பம் மோனைத் தொடை அளவோடு அமையும்.
5)
உய்த்தல்இல் பொருண்மை
கௌடம் உய்த்தல் பொருளது. வைதருப்பம் உய்த்தல்இல் பொருளது.(புலியூர்க் கேசிகன் கருத்து)
6)
காந்தம்
கௌடம் உலகியல்பு கடந்தது. வைதருப்பம் உலகியல்புக்கு உட்பட்டது.
7)
வலி
கௌடம் தொகைச்சொல் மிக்கது. வைதருப்பம் தொகைச்சொல் அளவானது.