3.6 தொகுப்புரை |
இதுகாறும் இப்பாடத்தில் ஒட்டு அணி, அதிசய அணி, தற்குறிப்பேற்ற அணி, ஏது அணி, நுட்ப அணி ஆகிய ஐந்து அணிகளைப் பற்றி விளக்கமாகப் பார்த்தோம். அவ்வணிகளின் இலக்கணம், வகைகள், வகைகளின் இலக்கணம், அவற்றுக்குரிய எடுத்துக்காட்டுப் பாடல்கள், அவற்றின் பொருள், அப்பாடல்களில் அவ்வணிகள் அமைந்திருக்கும் தன்மை ஆகியவற்றைத் தெளிவாக அறிந்தோம். பிறிது மொழிதல் அணியும், தற்குறிப்பேற்ற அணியும் திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் சிறப்பாக அமைந்திருப்பதனைச் சில சான்றுகள் கொண்டு பார்த்தோம். |