இந்தப் பாடம் தண்டியலங்காரம் பொருளணியியலில் இருபத்திரண்டு முதல் இருபத்தேழு வரை கூறப்படும் உதாத்த அணி, அவநுதி அணி, சிலேடை அணி, விசேட அணி, ஒப்புமைக் கூட்ட அணி, விரோத அணி ஆகிய ஆறு அணிகளைப் பற்றிச் சொல்கிறது.
இந்த ஆறு அணிகளின் இலக்கணம், அவற்றின் வகைகள், அவற்றிற்குச் சான்றாகக் காட்டப்படும் மேற்கோள் பாடல்கள், அப்பாடல்களின் பொருள், அணி இலக்கணப் பொருத்தம் ஆகியவற்றைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் இந்தப் பாடம் சொல்கிறது.
|
|