இந்தப் பாடம் தண்டியலங்காரம் பொருளணியியலில் இருபத்தெட்டாவது அணி முதல் முப்பத்தைந்தாவது அணி வரை கூறப்படும் மாறுபடு புகழ்நிலை அணி, புகழாப் புகழ்ச்சி அணி, நிதரிசன அணி, புணர்நிலை அணி, பரிவருத்தனை அணி, வாழ்த்து அணி, சங்கீரண அணி, பாவிக அணி ஆகிய எட்டு அணிகளைப் பற்றிச் சொல்கிறது.
இவ்வணிகளின் இலக்கணம், அவற்றின் வகைகள், அவற்றிற்குச் சான்றாகக் காட்டப்படும் மேற்கோள் பாடல்கள், அப்பாடல்களின் பொருள், அணி இலக்கணப் பொருத்தம் ஆகியவற்றைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் சொல்கிறது.
|
|