1.0 பாட முன்னுரை இப்பாடமானது பேச்சு ஒலிகள் பற்றியும், அவற்றின் பாகுபாடு பற்றியும் விளக்குகிறது. தமிழில் உள்ள உயிர் ஒலிகள் தோன்றி வளர்ந்த வரலாற்றை விவரிக்கிறது. உயிர் ஒலிகளை மொழியியலார் எதன் அடிப்படையில் பாகுபடுத்தி விவரிக்கின்றனர் என்பது பற்றி விளக்குகிறது. மேலும் அவர்கள் இவ்வுயிர் ஒலிகளை எவ்வாறு எல்லாம் விளக்கிக் காட்டுகின்றனர் என்பது பற்றியும் சொல்கிறது. |