இப்பாடம்
பேச்சு ஒலிகளின் பிறப்புப் பற்றி விளக்குகிறது.
பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியமும்,
அதற்குப் பின்னர் தோன்றிய நன்னூல் போன்ற இலக்கண நூல்களும் பேச்சு
ஒலிகளைப் பற்றியும், அவை எவ்வாறு எங்கெங்குப் பிறக்கின்றன என்பதைப்
பற்றியும் கூறும் கருத்துகளை விளக்குகிறது.
உயிர் ஒலிகள் தோன்றி வளர்ந்த வரலாற்றைச் சான்றுகளுடன் விளக்கிக்
காட்டுகிறது.
தற்காலத்தில் மொழியியலார் உயிர்ஒலிகளை எவ்வாறு எல்லாம்
பாகுபடுத்திப் பார்க்கின்றனர் என்பதை விளக்குகிறது. உயிரொலிகளின்
பிறப்புப் பற்றி மொழியியலார் கூறும்
கருத்துகளை விளக்குகிறது. பிறப்புமுறை
அடிப்படையில் உயிர் ஒலிகளை மொழியியலார் பலவாறு பாகுபடுத்திக்
காட்டுவதை விவரிக்கிறது.
|