2.1 கூட்டொலி என்றால் என்ன? “இரண்டு உயிர் ஒலிகளை ஒன்று சேர்த்து ஓர் அசையில் - ஒரு முயற்சியில் - ஒலிக்கும்போது உருவாகின்ற ஒலி கூட்டொலி (diphthong)” என்று ஆங்கில மொழியியல் அறிஞர் நோயல் ஆம்பீல்டு (Noel Armfield) என்பவர் கூறுகிறார். ஐ, ஒள என்னும் இரண்டு உயிர் ஒலிகளும் கூட்டொலிகள் எனக் கூறப்படுகின்றன. இவை இரண்டும் தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் எந்த எந்த ஒலிகளின் கூட்டால் உருவாயின என்று இம்மொழிகளில் கூறப்பட்டுள்ளது. |