|
|
இந்தப்
பாடம் என்ன சொல்கிறது?
|
 |
|
|
இப்பாடம் கூட்டொலி என்றால் என்ன என்பதை
விளக்குகிறது. தமிழிலும், வடமொழியிலும் உள்ள கூட்டொலிகள்
யாவை என்பதைக் குறிப்பிடுகிறது. கூட்டொலிகள் பற்றி
வடமொழியில் கூறப்படும் ஒரு கருத்தையும், தமிழில் கூறப்படும்
இருவேறு கருத்துகளையும் குறிப்பிட்டு விளக்குகிறது. தமிழில்
கூறப்படும் இருவேறு கருத்துகளையும் எடுத்துக் கூறி, அவற்றுள்
பொருந்தும் கருத்தை மொழியியல் அடிப்படையில் விளக்கிக்
காட்டுகிறது. மேலும் தமிழில் கூட்டொலிகள் சொல்லின்
எப்பகுதியில் வருகின்றன என்பதையும் விளக்குகிறது.
|
|
|
|
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
|
|
-
கூட்டொலி
பற்றிய விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.
-
கூட்டொலிகள்
பற்றி வடமொழியிலும் தமிழிலும் கூறப்படும் கருத்துகளைத்
தெரிந்து கொள்ளலாம்.
-
தமிழில்
கூட்டொலிகள் பற்றி இருவேறு கருத்துகள் நிலவுவதை இலக்கண,
இலக்கிய நூல்கள் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
-
தமிழில்
கூட்டொலிகள் பற்றிய இருவேறு கருத்துகளில் மொழியியல்
முறைமைக்குப் பொருந்தும் கருத்து யாது என்பதைத் தெளிந்து
விளங்கிக் கொள்ளலாம்.
-
தமிழில்
உள்ள சொற்களில் கூட்டொலிகளின் வருகை பற்றி விளக்கமாக
அறிந்துகொள்ளலாம்.
|
|
|
|