1) புணர்ச்சியில் உடம்படுமெய் ஒலிகள் வரும் சூழல் பற்றி நன்னூல் கூறுவன யாவை?

வருமொழியின் முதலில் உயிர் வரும்போது, நிலைமொழியின் இறுதியில் ‘இ, ஈ, ஐ’ என்னும் உயிர் ஒலிகள் இருக்குமானால் யகரமும், ‘ஏ’ என்னும் உயிர் ஒலி இருக்குமானால் யகரம், வகரம் ஆகிய இரண்டும், ‘ஏனைய உயிர் ஒலிகள்’ இருக்குமானால் வகரமும் உடம்படுமெய் ஒலியாக வரும் என்று நன்னூல் கூறுகிறது.



முன்