இந்தப்
பாடம் என்ன சொல்கிறது?
|
 |
|
|
கிளைமொழிகளில் உள்ள ஒலி மாற்றங்களைப் பற்றி
விளக்குகிறது. பழங்காலத்தில் இலக்கண நூலாரும்,
தற்காலத்தில் மொழியியலாரும் செய்துள்ள கிளைமொழிப்
பாகுபாட்டை விளக்குகிறது. சங்க காலத்திலும்,
இடைக்காலத்திலும் வழங்கிய கிளைமொழிகளில் நிகழ்ந்த ஒலி
மாற்றங்களை அவ்வக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்,
இலக்கண உரைகள், கல்வெட்டுகள் துணைகொண்டு
விளக்குகிறது. தற்காலத் தமிழில் வட்டாரம், சமூகம், தொழில்
போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, கிளைமொழிகளில்
ஏற்பட்டுள்ள ஒலிமாற்றங்கள் பற்றி மொழியியலார்
தெரிவிக்கும் கருத்துகளை விளக்குகிறது.
|
|
|