பண்டைக்
காலத்திலிருந்தே தமிழர்கள் வாணிகத்தின் பொருட்டுக் கடலில் மரக்கலம்
செலுத்திய பெருமை கொண்டவர்கள். மேலும், சோழர்கள் கடலில் கலம் செலுத்தி
வெளிநாடுகளுக்குச் சென்று, போர் வென்று, கடாரம் கொண்டும், ஈழநாடு கொண்டும்
பெயர் பெற்ற ஆற்றல் மிக்கவர்கள். யவன நாட்டினரும் பிறரும் தமிழ் நாடடிற்கும்
பண்டமாற்றும், வாணிகமுங்குறித்து மரக் கலங்களில் வந்துள்ளனர். எனவே,
இரவில் மரக்கலங்களைச் செலுத்தி வருகையில் கரைதெரியும் வண்ணம் கலங்கரைவிளக்கம்
தமிழர்களால் அமைக்கப்பட்டது.
பூம்புகார்க் கடற்கரையில், இரவில்
ஆழமான கடலில்
செல்லும் கப்பல்களுக்கு ஒளிகாட்டி உதவிய கலங்கரை விளக்கம்
பற்றிப் பெரும்பாணாற்றுப்படையில்,
இரவில்
மாட்டிய விளங்குசுடர் நெகிழி
உரவிநீ ரழுவத் தோடுகலங் கரையும்
துறைபிறக் கொழியப் போகி
(349-351) |
நெகிழி
|
= |
அகல் விளக்கு; |
உரவு
நீர் |
= |
வலிமைமிக்க
நீர்; |
அழுவம்
|
= |
கடல் ; |
ஓடுகலம்
|
= |
கடலில்
செல்லும் கப்பல் |
எனவரும் அடிகளால் தெரிந்துகொள்ளலாம்.
இக்காலத்தில் தான் கலங்கரை விளக்கங்கள்
உள்ளன என
நினைக்க வேண்டாம். பண்டைக் காலத்தில், உயரமான கட்டடம்
எழுப்பி எண்ணெய் ஊற்றிய பெரிய அகல் விளக்கேற்றி நீண்ட
தூரத்துக்கு வெளிச்சம் தெரியுமாறு வழிவகை கண்டிருந்தனர்
என்பது போற்றுதற்குரியது.
|