கட்டடம், கட்டிடம்
ஆகியவற்றுக்கு விளக்கம் தருகிறது.
கட்டடக் கலைக் கொள்கையைப் புரிந்து கொள்ளத் துணை
செய்கிறது.
தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப
ஐந்திணைக்குரிய நிலப்பகுதியில்
மக்கள் வாழும் இடங்களை விளக்குகிறது.
கட்டடக் கலை வரலாற்றுக்கு
அடிப்படையான நகர
அமைப்பையும், அதன் வகைகளையும் கூறுகிறது.
மதுரை, புகார் காஞ்சிபுரம் ஆகிய
நகரங்களைப் பெருமை
கொள்ளச் செய்த கட்டடங்களைப் பற்றிய சில
விவரங்கள் தருகின்றது.
பண்டைய சங்க கால மக்கள் தமக்காகக்
கட்டிக் கொண்ட
வீடுகளைக் குறித்த செய்திகளைக் கூறுகின்றது.
நாட்டுப் பாதுகாப்பிற்கான
அரண்கள், மன்னரின்
அரண்மனை பற்றிய சில செய்திகளைக் குறிப்பிடுகின்றது.
அரசர்களின் படைக் கருவிகள்
பாதுகாத்து வைத்தற்குரிய
இடங்கள் பற்றியும் தெரிவிக்கின்றது.
கடலில் செல்லும் மரக்கலம்
கரைக்கு வருவதற்கு உதவும்
கலங்கரைவிளக்கம் பற்றிப் பேசுகிறது.
தமிழகத்தின் நீர் மலோண்மையை
எடுத்துக்காட்டுகிறது.
|