2.4 பிராகாரம்

    இராமேசுவரம் கோயில் அளவில் பெரியது. நீளம் 865 அடி, அகலம் 657 அடி ஆகும். சில உத்திரங்கள் 49 அடி நீளம் கொண்டவை; அவை ஒவ்வொன்றும் ஒரே கல்லில் ஆன சி்றபினைக் கொண்டவை.

    கருங்கல்லைக் காண இயலாத இராமேசுவரம் தீவில் இவ்வாறு பல்லாயிரம் டன் கருங்கல் பாறைகளைப் பல கலை வடிவங்களாக்கிக் கொணர்ந்த தமிழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என வெளிநாட்டார் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கோயிலின் மூன்றாம் பிராகாரம் 2250 அடி நீளத்தில் (சுற்றளவு) உள்ளது தனித் தன்மை வாய்ந்தது; 1212 தூண்களுடன் இது போன்ற நீளமான கோயிற் பிராகாரம் உலகில் வேறெங்கும் இல்லை என்பர். தமிழகத்து ஆலயக் கட்டடக் கலைக்கு இந்தப் பிராகாரம் மிகுந்த சிறப்பினைச் சேர்த்துள்ளது.