சங்கம் மருவிய
காலத்திலும், இடைக்காலத்திலும்,
கட்டடங்கள் பல நோக்கங்களில் கட்டப்பட்டன என்பது சுட்டிக்
காட்டப்படுகிறது. சிறப்பாகப் பூம்புகாரில் அமைந்த
மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் ஆகியவையே யல்லாமல்,
அங்கே அமைந்திருந்த ஐவகை மன்றங்கள், பல கோயில்கள்
முதலியவை கூறப்படுகின்றன.
சிலப்பதிகாரம்
காட்டும் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த
ஆடலரங்கம் பற்றிய விவரங்கள் கூறப்படுகின்றன.
தமிழ்நாட்டில் மிகச்
சிறப்புற்றுத் திகழும் காஞ்சிபுரத்தின்
நகரமைப்பும், பல்வகைச் சமயத்தாரும் இனிது வாழ்ந்திருந்த
இடங்களும் கூறப்படுகின்றன.
நாட்டு வளத்திற்கு
நீர் ஆதாரங்களின் தேவையையுணர்ந்து
மன்னர்கள் நீர்ப்பாசனத்திற்கு வழிவகைகள் கண்ட திறம்
பேசப்படுகிறது.
அரண்மனை, மடங்கள்,
ஆசிரமங்கள், தெப்பக்குளம்,
அணைகள் போன்றவை கட்டப்பட்ட கலைத்தன்மை குறித்தும்
குறிப்பிடுகிறது.
|