பாடம் - 3

D05113 : பல்லவர், சோழர் கோயிற்கலை
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    மனிதன் தன் வாழ்க்கையில் படிப்படியே முன்னேறிக் கொண்டு செல்கின்ற இயல்பினன். கட்டடக் கலையிலும் முன்னேறுவதற்கு அவனைத் தாண்டிய உந்து சக்திகளைக் கூறுகிறது.

    ஆலயக் கட்டடங்கள் தொடர்பான சிந்தனை முகிழ்ப்பினை எடுத்துக்காட்டி, ஆலயங்களின் வகைகளைக் கூறுகிறது.

    பல்லவர் காலத்தில் அமைந்த கற்கோயில்கள் பற்றிய விளக்கங்கள் கூறப்படுகின்றன.

    தேர்க்கோயில்களும் கட்டுமானக் கற்கோயில்களுமாக வளர்ந்த படிநிலை வளர்ச்சி கூறப்படுகிறது.

    பொதுவாக ஆலய வளர்ச்சியில் பல்லவர்கள் தாம் கட்டிய கோயில்கள் வாயிலாகப் புரிந்த பணிகள் கூறப்படுகின்றன.

    பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட திருவதிகை வீரட்டானம், திருச்சி மலைக்கோட்டைக் கோயில், ஆலயக் கட்டுக் கோப்பு ஆகியவை பற்றிக் கூறப்படுகின்றது.

    பல்லவர் காலத்திற்குப் பின் சோழர்கள் ஆட்சிக்கு வந்து கட்டிய அரண்மனைகள் பற்றிய சில செய்திகள் கூறப்படுகின்றன.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • கவின் கலைகளுள் பயன்பாடு மிக்க கட்டடக் கலையில் ஆர்வம் பிறந்தால்தான் அதன் படிநிலை வளர்ச்சிக்கு வழி பிறக்கும். ஆன்ம நலத்திற்கு ஆலயம் துணைநிற்பதால், ஆலயங்களைப் பல வகைகளில் கட்டக் கூடிய சூழல் ஏற்பட்டது. பல்லவர்கள் தோற்றுவித்த கருங்கற்கோயில், தேர்க்கோயில், குடைவரைக் கோயில், கட்டுமானக் கோயில் ஆகியவை பக்தியியக்கத்திற்குத் துணை நின்றன; அது தமிழகத்திற்குப் பயன் மிக விளைவித்துள்ளது.

  • திருவதிகை வீரட்டானம், திருச்சி மலைக்கோட்டைக் கோயில் ஆகியவை முன்னோடிகளாக அமைந்து, பிற்காலக் கட்டுமானக் கோயில்கள் தோன்ற வழிவகுத்தன என்பதை ஊகித்து உணர்ந்து கொள்ளலாம்.

  • பல்லவர்களையடுத்துச் சோழர்கள் கட்டடக் கலைக்குப் பேராதரவு அளித்தவர்கள்; அவர்களின் அரண்மனைகள் எவ்வாறு கட்டப்பட்டிருந்தன என்பதை வரலாற்று நோக்கில் தெரிந்து கொள்வதே பயனாகும்.

பாட அமைப்பு