மக்கள் தாம் வாழும் வீடுகளைப்
போலவே, தாம் வணங்கும்
கடவுளுக்கும் உறையுள் தேட வேண்டுமென்று ஆலயம் அமைத்தது
அவர்களின் தொடக்க முயற்சி. பல்லவர்கள் கற்கோயில்கள்,
குடைவரைக் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள் எனக் கட்டித்
தொடக்கி வைத்த ‘கோயில் கட்டும் பணி’, பின் வந்த சோழர்,
பாண்டியர் முதலிய பலராலும் போற்றிப் படிப்படியே
உயர்த்தப்பட்டது. இவ்வுண்மையை விளங்கிக் கொள்ளும் வகையில்
சோழர், பாண்டிய மன்னர்கள் கட்டிய கோயில்களின் கட்டடக்
கட்டுமானங்கள் விவரிக்கப்படுகின்றன. கோயிற் பண்பாட்டு
வரலாற்றைக் கட்டடக் கலை வாயிலாகப் புலப்படுத்தும் அதே
வேளையில், சில கோயில்கள் தொடர்பான புராணக் குறிப்புகளும்
கூறப்படுகின்றன.
‘கடல் போன்று விரிந்து
பரந்துள்ள கவின்கலையே கட்டடக்
கலை’ என்பதைப் பயில்பவர்கள் நன்கு புரிந்து கொள்ளுதற்கு
உரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
|