|
இக்காலக் கோயிற் கட்டடக்
கலை வரலாற்றுக்குத் துணை
செய்யும் முன்னோடியாக நாட்டுப்புறவியல் அணுகுமுறை பற்றிக்
கூறுகிறது. சிறுதெய்வக் கோயிலமைப்பும் அதனால் ஊருக்குக்
கிடைக்கும் பாதுகாப்பும் பற்றிக் குறிப்பிடுகிறது.
பண்டைக் காலத்தில் சிறுதெய்வ
வழிபாட்டுக்கு
அடிப்படைக் காரணங்கள் எப்படி அமைந்தன என்பது
கூறப்படுகிறது.
நாகர் வழிபாடு பண்டைக் காலத்திலிருந்தே
வழிவழியே
வந்துள்ளது என்பதும், பெருந்தெய்வக் கோயில்களிலும் அதன்
தாக்கம் உள்ளது என்பதும் விளக்கப்படுகின்றன.
ஐயனார் கோயில்கள் கிராமங்களி்ல்
அமைந்துள்ளன
என்பது விவரிக்கப்படுகிறது. சாத்தனே ஐயனாராக
வழிபடப்படுகின்றார் என்பதும் ஆராயப்படுகின்றது.
சுடலைமாடன், கருப்பசாமி,
முனீசுவரன் கோயில்கள்
எப்படியெல்லாம் சிற்றூர் மக்களுக்குக் காவல் நிறுவனங்களாக
அமைந்துள்ளன என்பதும் விளக்கப்படுகின்றது.
இயக்கி எனும் பெண்தெய்வம்
கோயில் கொண்டுள்ள
இடங்கள் பற்றிக் கூறப்படுகின்றது.
சப்தமாதர் இடங்கொண்டுள்ள
கோயிலும்
கோயில்வளாகமும் பற்றிக் கிடைக்கும் வரலாற்றுச் செய்திகள்
கூறப்படுகின்றன. சேட்டை வழிபாடு கோயிலில்
இடங்கொண்டுள்ளமை பற்றி விவரங்கள் தரப்படுகின்றன.
பௌத்தர்கள் சமணர்கள் ஆகியோரின் வழிபாட்டிடங்கள்
பற்றியும் ஆசிரமங்கள் பற்றியும் கிறித்துவர்
இசுலாமியர்
வழிபாட்டிடங்கள் பற்றியும் செய்திகள் தரப்படுகின்றன.
|