1) | ஆலய மண்டபங்களில் விதானச் சிறப்பினைப் பற்றிக் கூறுக. |
பல்லவர் காலத்திற்குப் பிறகு, ஆலய மண்டபங்களின் உட்பக்கக் கூரையான விதானத்தில் சிற்ப வேலைப்பாடுகளைச் சோழர்கள் புகுத்தி வந்துள்ளனர் ; கீழைச் சாளுக்கியர்களுடன் கொண்ட தொடர்பினால் இத்தகைய சிற்பக் கலைத்தாக்கம் உண்டாயிற்று என்பர். விதானத்தில தாமரை மலர்கள், மலர் கொத்தும் கிளிகள், எட்டுத் திக்குப் பாலகர்கள், இராசிமண்டலங்கள், பததேவதைகள், பதமண்டலங்கள், கற்சங்கிலிகள், பாம்பு வளையங்கள் முதலிய சிற்பப் படைப்புகள் காலந்தோறும் வளர்நிலை கொண்டன. |