ஆலயங்கள் கட்டடப்படும்
காலத்து எத்தகைய
ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்பதைப் படிப்படியே
விளக்கிக் கூறுகிறது. நிலம் தேர்ந்தெடுத்து,
ஆலய
அங்கங்களாகிய சுவர் முதலியவற்றை எப்படி
அமைப்பது
என்ற திட்டத்தை இந்தப் பாடம் கூறுகிறது.
தமிழக
ஆலயங்கள் படிப்படியே விரிவுபடுத்தப்பட்ட
நிலையில் வகை வகையான மண்டபங்கள் கட்டப்பட்டதையும்,
மண்டப விதானச் சிறப்பையும், தாங்கு தளமாகிய
அதிட்டானத்தின் பலவகைகளையும், சிறப்பாக மகா
மண்டபத்தை அமைக்கும் விதிகளையும் இப்பாடம் விளக்கிக்
கூறுகிறது.
எண்ணிக்கை
அடிப்படையில் கட்டப்படும் ஆயிரக்கால்
மண்டபம் முதலியவற்றையும், தெய்வங்களைத் தூண்
அமைப்பில் காணும் கற்பனை நலத்தையும் விளக்கிச்
செல்கிறது.
சிற்பத்தூண்கள்
எவ்வாறெல்லாம் வளர்ச்சி நிலையில்
வடிவமைக்கப்பட்டன என்பதையும், கோபுரத்தூண், தீபத்தூண்
ஆகியவற்றை பற்றியும், இசைத் தூண்களைப் பற்றியும்
விளக்கம் தருகிறது.
ஆலயத்தின்
முக்கிய உறுப்பான கருவறை, சதுரமாகவும்
நீள் சதுரமாகவும் வட்டமாகவும் அமைந்துள்ளமை பற்றி
இந்தப் பாடம் விளக்குகிறது. அபிடேகம்
புரிகையில்
வெளியேறும் நீர் பிரநாளம் வழியே செல்லும்; அந்தப்
பிரநாளம் கலையமைப்புடன் பொருந்தியிருப்பதைச்
சொல்லுகிறது.
ஆலயத்தில்
கருவறைக்கு மேலுள்ள விமானம்
எப்படியெல்லாம் கலை நுட்பத்துடன் அமைகிறதென்பது
பற்றி புலப்படுத்துகிறது.
ஆலயத்தில்
படிக்கட்டுகள் பலவகைகளில்
அமைப்பதற்கான காரணமும் கூறப்படுகின்றன.
|