பாடம் - 5

D05125 அரசர்கள் வளர்த்த ஓவியக்கலை

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படும் ஓவியங்களைப் பற்றிக் கால வரிசைப்படி தொகுத்துக் கூறுகிறது. பல்லவர், பாண்டியர், சோழர், விசயநகர வேந்தர், நாயக்கர் காலக் கோயில்களில் காணும் ஓவியங்களின் பண்பு, அவற்றின் மூலம் புலப்படும் தமிழ்நாட்டு நாகரிகம், பண்பாடு பற்றி எடுத்துக் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழ்நாட்டு ஓவியம் கோயில்களை மையமாகக் கொண்டு காலந்தோறும் வளர்ந்த முறைமையை அறியலாம்.
  • ஓவியங்களின் வாயிலாகத் தமிழ்நாட்டுச் சமயப் போக்கை அறியலாம்.
  • தமிழ்நாட்டு நாகரிகத்தையும் பண்பாட்டையும் அறியலாம்.
  • தமிழ்நாட்டுக் கோயில் ஓவியங்களை அறிவது, எதிர்காலத்தில் ஆய்வு செய்யும் மாணவர்க்கு அவை எங்கெல்லாம் உள்ளன என்பதற்கு வழிகாட்டியாக அமையும்.

பாட அமைப்பு