|
முச்சங்க காலத்தில்
இசை, நாடக இலக்கணங்கள்
இருந்தமையைச் சுட்டிக்காட்டியும் தொல்காப்பியத்தில்
இசைக்கூறுகள் இருந்தமையைக் குறிப்பிட்டும் தமிழிசையின்
தொன்மையை இப்பாடம் நிலைநாட்டுகிறது.
தமிழர்களின் ஐந்திணைக்கும்
உரிய பண்களை எடுத்துக்காட்டி
அந்தந்தப் பண் இசைப்பதற்குரிய காலத்தையும் வரையறை
செய்திருப்பது இசைக்கலையில் அவர்கள் பெற்றிருந்த திறனுக்குச்
சான்றாவதை விளக்குகிறது.
ஏழிசை,
ஏழிசை ஏழு சுரங்களாகியது. பண்களின் எண்ணிக்கை,
கலைப்பிரிவினர், யாழ், குழல் போன்ற இசைக் கருவிகள்,
தாளங்கள், இசைபாடுவோர் தகுதி, தாளக் கருவியாளர் தகுதி
ஆகிய அனைத்தும் மிக விரிவாக இப்பாடத்தில்
சொல்லப்படுகின்றன.
|