2.6
தேவார நிகழ்ச்சிகள்
|
 |
தேவாரப் பாடல்கள்
சிவன் கோயில்களில் பாடப்படும். பூசை
வேளைகளில் ஓதுவார் தேவாரம் பாடுவார். விசேட விழாக்களின்
போது தேவாரப் பண்ணிசைக் கச்சேரிகள் நடைபெறும். கோயில்,
மடங்கள் மற்றும் ஆதீனங்களைச் சார்ந்த ஓதுவார்கள் தேவாரப்
பண்ணிசைகளை மரபு முறையில் பாடுவார்கள்.
2.6.1
அரங்கில் தேவாரம்
தேவாரப் பாடல்கள்
பொருள் பொதிந்தவை. அவற்றின்
பண்ணிசை இனிமையானது. இதனால் தேவாரப் பாடல்கள்
பொது அரங்குகளிலும் பாடப்படும். ஓதுவார்கள் அல்லாத
பிற இசைவாணர்களும் தேவாரங்களைப் பண்ணிசையில் பாடுவர்.
கருநாடக இசைக் கச்சேரிகளில் பாடுவர். பரத நாட்டிய
அரங்குகளிலும் தேவாரப் பாடல்களுக்கு அபிநயம் செய்வார்கள்.
|