|
தேவார நாயன்மார்
என்று புகழ் பெற்ற
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும்
இனிய பண்களில் பாடிய தேவாரப் பாக்களைப் பற்றிப்
பேசுகிறது இப்பாடம். இம்மூவர் பாடிய தேவாரப்பாக்கள்
தமிழ் வேதம் எனப் போற்றப்படுவதையும் குறிப்பிடுகிறது.
தேவார
மூவர்க்கு முன்னோடியாக அமைந்த காரைக்கால்
அம்மையார் பற்றியும் சுட்டுகிறது.
சம்பந்தர் ஞானப்பால்
உண்டு முதல் தேவாரப் பாடல்
பாடியதையும் பொற்றாளம் பெற்றதையும் குறிப்பிடுவதோடு அவர்
ஆற்றிய அற்புதங்கள், திருநீற்றின் பெருமை முதலியவற்றையும்
இப்பாடம் விரிவாகக் கூறுகிறது.
அப்பர்
சமணராகிப் பின் சைவரானதும், தனக்கு
இழைக்கப்பட்ட கொடுமைகளை அவர் இறைவன் அருளால்
எதிர்கொண்ட தன்மையும், அவர் நிகழ்த்திய அற்புதங்களும்,
அவருடைய உழவாரப் பணியும் விளக்கப்படுகின்றன.
இறைவன் சுந்தரரைத்
தடுத்தாட்கொண்ட வரலாறு சொல்லப்படுகிறது. சுந்தரர் பரவையாரை
மணந்ததும், அற்புதங்கள் பல நிகழ்த்தியதும், இறுதியில் திருக்கயிலையில் முக்தி பெற்றதும் சொல்லப்படுகின்றன.
முதலாம்
இராஜராஜன், நம்பியாண்டார் நம்பி மூலம்
தேவாரப் பாடல்களை மீட்டெடுத்ததும் அவை
ஏழு
திருமுறைகளாக வகுக்கப்பட்ட தன்மையும், அவற்றுக்குப்
பண் அமைத்துக் கோயில்களில் பாடவைத்ததும்
இடம்
பெறுகின்றன.
|