பாடம் - 1

D05141 பழங்கால நாடகக்கலை

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழ் நாடகத்தின்     தொன்மைப் பகுதியினை இப்பாடப்பகுதி விளக்குகிறது. தமிழ் நாடகம் குறித்து, சங்ககாலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் தோன்றிய நூல்கள் தமிழ் நாடக வடிவம் கொண்டிருந்த நிலையை எடுத்துக் கூறுகின்றது. அதனை விளக்குவதாக இப்பாடம் அமைகிறது.

தமிழ் நாடக வரலாற்றில் குறிப்பிடத்தக்க கூறான சிற்றிலக்கிய நாடகங்கள் என்னும் இலக்கிய வடிவிலான நாடகங்களின் தோற்றம், வடிவம், கருத்துகள் மற்றும் கதைமாந்தர் வெளிப்பாட்டுத்தன்மைகள் ஆகியனவற்றை விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழ் நாடகத்தின் தொன்மைப் பெருமையினை உணரலாம்.
  • தமிழ் நாடகம் தமிழர் பண்பாட்டோடு இரண்டறக் கலந்த நிலையினை அறியலாம்.
  • தமிழ் நாடகத்தின் தொடக்ககாலச் செயல்பாட்டு நிலைகளை அறிந்து கொள்ளலாம்.


  • சிற்றிலக்கிய வடிவில் தமிழ் நாடகம் சிறப்புற்று விளங்கிய நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.
  • தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வினைச் சித்திரிக்கும் தமிழ் நாடகத்தின் வடிவங்களை அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு