தமிழ் நாடகம் குறித்து நாம் புதிதாக அறிகின்ற
செய்திகள்
அதன் வளர்ச்சியையும், மாற்றத்தையும் புலப்படுத்துகின்றன.
தொடக்கத்தில் கூத்து என்றும், ஆட்டம் என்றும்
திறந்த
வெளியில் நாடகம் நடந்த நிலை நாம் அறிந்ததே
ஆகும்.
அத்தகைய கலை இன்றைய வளர்ச்சி நிலையை எட்டுவதற்கு
ஏதுவாகக் காலத்தோடு மாறி வந்துள்ளது. நாட்டுப்புற மக்களோடு
இக்கலை உறவு கொண்ட நிலையும் இவ்வகை
வளர்ச்சி
மாற்றத்தின் பாற்பட்டதே ஆகும். இவ்வகையில் இது நாட்டுப்புறக்
கலையாகப் பரிணமிக்கலாயிற்று. நாட்டுப்புற மக்களிடையே
காலங்காலமாகத் தவிர்க்க இயலாத வகையில் வேரூன்றியுள்ள
விழா நிகழ்வுகளுக்கு, இவ்வகை நாட்டுப்புற நாடக வடிவங்கள்
உகந்தனவாயின.
எனவே இவ்விழாக்களில்
நடத்தப்பெறுகின்ற நாடக
வடிவங்களை விழாக்கால நாடகங்கள் என்று
பெயரிட்டு
அழைப்பது பொருத்தமாகும். இப்பாடப்பகுதியில் குறிப்பிடத்தக்க
விழாக்கால நாடக வடிவங்கள் குறித்துக் காண்போம். |