|
4.5 தொகுப்புரை |
|
|
|
அமைப்பியலுக்கு முந்தியதும், அதற்குப் பூர்வாங்கமாக
அமைந்ததும் உருவவியலாகும். உருவத் தோற்றத்தின் நேர்த்தி
மற்றும் அழகு பற்றிப் பேசுவது இதன் அடிப்படை. உருவவியல்,
மேலைநாட்டில் பிறந்தாலும் தமிழ்த் திறனாய்வு உலகில்
செல்வாக்குடைய ஒரு அணுகுமுறையாக இன்றும் வழங்குகிறது. |
|
|
|
வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்ததே தத்துவம்.
இலக்கியங்களிலிருந்தும் இதைக் காணலாம். மார்க்சியம் மட்டும்
பொருள் முதல் என்பதை மையமாகக் கொண்டு அமைந்திருக்கிறது.
மற்றவை கருத்து முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. |
|
|
|
சமுதாயத்தில் மதிப்பு என்று எது கொள்ளப்படுகின்றதோ
அதுவே அறமாகக் கருதப்படுகின்றது. கலையியலாகச் சமுதாயத்தை
வெளிப்படுத்தும் இலக்கியத்தில் அறம் ஏதேனும் ஒரு வகையில்
வெளிப்படுகிறது. அறவியல் அணுகுமுறை இலக்கியத்தில்
வெளிப்படும் ஒழுக்க முறையை ஆராய்வதோடு இலக்கியத்தை
அதனடிப்படையாகத் தரம் பிரித்தும் கூறுகிறது. |
|
|
|
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1) |
இந்திய சமயத் தத்துவம் எவற்றின் அடிப்படையில்
உண்டாக்கப் பெற்றிருக்கின்றது? |
(விடை) |
2) |
பாவத்தின் சம்பளம் மரணம் - எந்தச் சமயத்தின்
தத்துவம் இது? |
(விடை) |
3) |
ஆணவம் - கன்மம் - மாயை பற்றி விளக்கும்
தத்துவம், விசிஷ்டாத்வைதமா? சைவ சித்தாந்தமா? |
(விடை) |
4) |
சரணாகதித் தத்துவ மரபைப் பின்பற்றியுள்ள
புகழ்பெற்ற இலக்கியம் எது? |
(விடை) |
5) |
அறநெறி அணுகுமுறை எதனுடைய ஒரு
பகுதியாகக் கருதப்படுகிறது? |
(விடை) |
|
|
|