6.0 பாட முன்னுரை | |
இலக்கியத்தை ஒரு திட்டமிட்ட முறையோடு அணுகுவதற்கும் விளக்குவதற்கும் பல அணுகுமுறைகள் உண்டு என முன்னைய பாடங்களில் கண்டோம். அவற்றுள் குறிப்பிடத்தக்க சில அணுகுமுறைகளை விளக்கிக் கண்டோம். தொடர்ந்து, இலக்கியங்களை ஒப்பிடுகின்ற முறை பற்றியும், மொழியியல், இலக்கிய ஆராய்ச்சிக்குத் துணை நிற்பது பற்றியும், சமுதாயவியலும் இலக்கியமும் என்பது பற்றியும் காணவிருக்கிறோம். இம்மூன்று அணுகுமுறைகளும் இலக்கியங்களின் சில அடிப்படைப் பண்புகளையும் சிறப்புக் கூறுகளையும் அறிந்து கொள்ள உதவுகின்றன. இலக்கியங்களின் எல்லைகளைக் குறுக்கிவிடாமல், இலக்கியத்தின் திறனை நாம் அறிய வேண்டும். இலக்கியத்தின் திறன், இலக்கியத்தோடு உறவு கொண்ட பொருள்களையும் கருத்தமைவுகளையும் சேர்த்துத்தான் அறியப்படுகிறது. இவை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் இடம் பெற்றுள்ளன. |