தமிழிலக்கியம் பற்றிய ஒப்பீடுகளில்
இந்நூலே முதலாவது என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து, தொ.மு.சி.ரகுநாதன்,
பாரதியையும் ஷெல்லியையும் ஒப்பிட்டு நூல் எழுதினார். எஸ்.ராமகிருஷ்ணன்
கம்பனும் மில்டனும் எனும் நூல் எழுதினார்.
கலாநிதி கைலாசபதி பாரதியையும் தாகூரையும் ஒப்பிட்டு இருமகா
கவிகள் என்ற ஒரு நூல் எழுதினார். மேலும் அவர் எழுதிய ஒப்பியல்
இலக்கியம் எனும் நூலே தமிழில் ஒப்பியல் பற்றி விளக்குகிற முதல்
நூலாகும். பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், ஒப்பியலக்கியத் துறையில்
பல கட்டுரைகளும் நூல்களும் எழுதியதோடு, தமிழகத்தில் பல்கலைக்கழக அளவில்,
முதன்முறையாக அதற்கென ஒரு தனித் துறையையும் ஏற்படுத்தினார். அண்மைக்காலத்தில்
தமிழ் இலக்கியங்கள், மிகப் பரவலாகப் பிறமொழி இலக்கியங்களோடும், மார்க்சியம்,
உளவியல் முதலிய கருத்தமைவுகளோடும் ஒப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. |