பாடம் - 3

D06143 - மார்க்சியத் திறனாய்வு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

     இலக்கியத் திறனாய்வின் புதிய பரிமாணங்களைத் தொடர்ந்து பேசுகிறது. மார்க்சியத்தின் வரையறை - விளக்கம்- ஆகியன பற்றிப் பேசுகிறது. மார்க்சியத் திறனாய்வின் அடிப்படைகளைப் பற்றிச் சொல்கிறது.

     மார்க்சியத் திறனாய்வு, கலையியல் / அழகியல் பரிமாணங்களுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது பற்றிப் பேசுகிறது. உருவமும் உள்ளடக்கமும், பிரதிபலிப்புக் கொள்கை, எழுத்தாளனின் சார்புநிலை முதலிய முக்கியமான பிரச்சனைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • மார்க்சிய சித்தாந்தம் பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்ள முடியும்.
  • மார்க்சிய நெறிமுறைகளின் வழி, மார்க்சியத் திறனாய்வு எவ்வாறு அமைந்திருக்கிறது என்பது பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
  • மார்க்சியத்     திறனாய்வின்     முக்கியமான பகுதிகளையும் பண்புகளையும் அறியலாம்.
  • தமிழ் இலக்கியத்தின் பரப்பை,     இந்தத் திறனாய்வின் மூலமாக ஆராய முடியும்.
  • மேலும் திறனாய்வு செய்ய, இந்தவகைத் திறனாய்வு உந்துதல் தருவதை அறிந்து கொள்ளலாம்.
  • இலக்கியத் திறனாய்வு அறிவியல் பூர்வமாக அமைய முடியும் என்பதையும் அறியலாம்.

பாட அமைப்பு