பாடம் - 4

D06144 பெண்ணியத் திறனாய்வு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

திறனாய்வின் புதிய பரிமாணங்களைத் தொடர்ந்து பேசுகிறது. பெண்ணியத்தை இன்னது, இத்தகையது என விளக்குகிறது. பெண்ணியத்தின் வகைகளையும் கொள்கைகளையும் பேசுகிறது.

தமிழில் பெண்ணிய எழுத்துக்கள் பற்றி எடுத்துக்காட்டுடன் கூறுகிறது.     பெண்ணியத்திறனாய்வின்     பணியையும் சாதனைகளையும் எடுத்துரைக்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • பெண்ணியம் ஒரு நவீனச் சிந்தனை முறை. அதனை அறிந்துகொள்ளலாம்.

  • பெண்ணியம், ஒடுக்கப்பட்டவர்களின் ஒரு கலகக்குரல் என்பதை அறிந்து கொள்ளலாம்.

  • ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், பெண்விடுதலை பற்றிய உணர்வு, அதனுடைய தன்மை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

  • தமிழில் பெண்ணியச் சிந்தனை, பெண்ணிய எழுத்துக்களை வளர்த்துள்ளது, வளர்த்துவருகிறது என்னும் உண்மையை அறிந்து கொள்ளலாம்.

  • பெண்ணியத்திறனாய்வு     பல     கோட்பாடுகளையும் கோணங்களையும் கொண்டது என்பதை அறியலாம்.

பாட அமைப்பு