பாடம் - 5

D06145 தலித்தியத் திறனாய்வு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இலக்கியத் திறனாய்வில் புதிய பரிமாணங்கள் எனும் தலைப்பில் தலித்தியத் திறனாய்வு பற்றிப் பேசுகிறது.

    தலித்தியம் என்றால் என்ன என்பதைப் பேசுகிறது. தலித்திய வாழ்க்கையின் தனித்த பண்பு நிலைகளையும், தலித் எழுச்சி பற்றியும் கூறுகிறது. தலித்திய இலக்கியம் பற்றிச் சொல்கிறது.     தலித்தியத் திறனாய்வின் வரையறைகள், பிரச்சனைகள் பற்றிப் பேசுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தலித் வாழ்நிலைகள் எவ்வாறு கவனிக்கத்தக்கனவாகி உள்ளன என்பதை அறியலாம்.
  • தலித்தியம், எப்போது, எந்தச் சூழ்நிலையில், ஒரு எழுச்சிக்குரலாகவும் ஒரு கோட்பாடாகவும் வளர்ந்தது என்பதை அறிய முடியும்.
  • தமிழில் பழைய இலக்கியங்களில் இழிசினர் வழக்கு என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது எத்தகையது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
  • இன்றைய இலக்கியத்தில்     தலித் இலக்கியத்தின் வளர்ச்சிகளை அறியமுடியும்.
  • தலித்தியத் திறனாய்வின் பல்வேறு பரிமாணங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

பாட அமைப்பு