திறனாய்வுத் தொகுதியில்
புதிய பரிமாணங்கள் என்ற
பகுதியில் இறுதியாக உள்ள புலம்பெயர்வு இலக்கியம்
பற்றிப்
பேசுகிறது. புலம்பெயர்வு இதில் விளக்கப்படுகிறது;
அதன்
வரையறை பேசப்படுகிறது.
புலம்பெயர்வுகள்
எந்தெந்தச் சூழ்நிலைகளில் நடக்கின்றன
என்பது பற்றிப் பேசுகிறது. புலம்பெயர்வுகள் தமிழகத்திலிருந்தும்
ஈழத்திலிருந்தும் எவ்வெவ்போது நிகழ்ந்தன என்பது
பற்றிப்
பேசுகிறது.
புலம்பெயர்வு இலக்கியங்களின்
பொதுத்தன்மைகளையும் போக்குகளையும் பற்றிப் பேசுகிறது.