4.5 தொகுப்புரை

ஒட்டு மொத்தமாக, எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் கதைகளை மதிப்பிடும் போது, அவரது கதைகள் அடுக்கடுக்கான சம்பவங்கள் மீது கட்டப்படவில்லை. மெல்லிய அசைவுகள், சலனங்கள், நடத்தைகள் ஆகியவற்றின் மீது கட்டப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. அவருடைய கதைகள் எளிமையானவை; அவற்றில் அநாவசியமான சிக்கல்களும் பிரச்சனைகளும் இடம் பெறவில்லை. வாழ்க்கையை நேரடியாகக் கண்டு இயல்பாகப் பேசுபவை. வார்த்தை ஜாலங்களும், சம்பவ ஏற்றத் தாழ்வுகளும் இல்லாதவை. நிஜமான வாழ்க்கையோடும் மனிதர்களோடும் சம்பந்தப்பட்டிருப்பவை. அவை படித்து அனுபவிப்பதற்கு உகந்த கதைகள். முதன் முதலில், சாகித்ய அக்காதமியின் பரிசினைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் என்ற பெருமை கு.அழகிரிசாமிக்கு உண்டு.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
நகரவாழ்வு பற்றிப் பேசும் கதை ஒன்றின் பெயரினைக் கூறுக.
2.
பொதுவுடைமைப் பார்வையில் அமைந்த கதைகள் யாவை?
3.

கு.அழகிரிசாமியின் பெரும்பான்மையான கதைகளின் கதைகூறும் பாங்கு எத்தகைய போக்கினது?
4.
கு. அழகிரிசாமியின் நடைப் பாங்கு எத்தகையது?

5.

சாகித்திய அக்காதமி பரிசு பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் யார்?